Wednesday, 11 January 2023

How to Season Kalchatti / கல்சட்டியை பழக்குவது எப்படி

How to Season Kalchatti / Kachatti

Now, this blog is available in Tamil also!

Jump to Tamil        Jump to Procedure (English)

Yes! All my upcoming posts will be both in English & Tamil. Previous posts will also be updated in Tamil shortly.

Hello friends! Today, I've come here with a different topic. This is not a recipe! It is about our traditional cookware. 

Yes! Have you heard of Kalchatti or Kachatti? It's also called Makkal Chatti!



Kalchatti or Kachatti is a traditional cooking utensil made from soapstone known as Savarkara Kal or Pattu Kal in Tamil. 
Milagu Kuzhambu, Mor Kuzhambu, Avial, Garlic Rasam etc. are very delicious made in this vessel. These foods, if cooked in a well-seasoned Kalchatti, will remain fresh for up to 15 days.
Any food that needs to be cooked slowly for a long time, like Vattha Kuzhambu, will smell and taste delicious, if the food is cooked at the constant temperature of the Kalchatti. 
In this post we will see how to season Kalchatti.
Before we start, you may wonder, why am I talking about Kalchatti in this modern age! Hmm.. There is a story behind this. 
Whenever I cook Vatha Kuzhambu, I find that, it doesn't taste as good as other dishes. When I asked my mother about this, she told me that the Kuzhambu would be more delicious if cooked in a kalchatti and told me to buy one. She asked me to buy one for her as well.

I searched for Kalchatti in all the big stores in Chennai. But got  informed that it is available in some specific stores only. I don't know where such a shop is located. Also, I had a fear of being cheated because there is a risk of fakes in the shops. Then my friend gave me a helping hand. She went to her hometown Kumbakonam to visit her mother.

Thanks to her mom! She told me that there is a good shop in Kumbakonam that sells such traditional utensils and took my friend there. My friend ordered two Kalchattis, one for me and one for my mother. Also, she also ordered the Maakkal Soppu made by Makkal for my home's Navratri Kolu.

      

 

 

 

  


The shopkeepers packed the Kalchattis and Soppu, that she had ordered for me, beautifully and very securely and sent them to Chennai by courier. Received in two days. The price is also low.
I am giving the shop address here. Those interested in buying Kalchatti or any other traditional cooking utensils can contact them. If you place your order directly over the phone, once they receive the payment for the ordered items, they will ship it safely to any location in India.

Sri Durga Store Home Needs
No. 47, Kumbeswarar Sannidhi, Kumbakonam.
Phone Number : 9597162483.



That's how I got Kalchatti. 

Well! What next? As soon as you get the kalchatti, can you immediately put it in the stove and start cooking? No! You shouldn't!
Unlike other modern cookware, Kalchatti is very sensitive! We have to season it. i.e., we have to introduce the Kalchatti to the heat very slowly .

Seasoning a Kalchatti is a very long process which I have given in detailed steps.

How to Season Kalchatti?




Take 2 teaspoons of turmeric powder and 1 teaspoon of castor oil in a small bowl.

Mix both well.

Wipe the new stone thoroughly with a clean cotton cloth to remove dust.

Spread the oil-turmeric mixture evenly on all sides of the pan (inside, outside and bottom of the chatti) without leaving any gaps and dry it in the sun.

 

  

  

  

  

 
   

  

 

Similarly, apply this turmeric mixed oil to the pan daily for a week and dry it in the sun.

Take any flour - gram flour / rice flour / wheat flour - anything is ok.
Mix the flour with little powdered salt and apply it to the pan, remove the oil residue and pour rice porridge - rice Kanji or drained rice water into the chatti and let it aside.

Never use soap for any reason.

Just like earthenware, Kalchatti also have many small pores. We should not use soap in these cookware, as there is a chance of soap getting stuck in those pores.

Similarly, do not use scrubbers used for cleaning other vessels. Keep separate scrubber for this. Do not use this one to clean other utensils.
Coconut Fiber / Modern Green Scotch Brite  - You can use anything as per your convenience. But it should not be used for other vessels.
Similarly, for a week, the kalchatti should be soaked in with fresh rice water every day. 

Repeat these procedures two to three times. 

Heat water in another vessel and pour that hot water into the kalchatti and put it on the stove. Keep the stove on low flame i.e. SIM. The water will start boiling in a few minutes.

  

 


  


The oil that has settled in the holes in the kalchatti will begin to float little by little in the boiling water.

You can see the oil droplets floating on the hot water.

Switch off the stove.

The water in the pan will continue to boil for five minutes after turning off the stove. So don't try to take the pan off the stove right away.

It takes at least an hour for the pan to cool down even after the boil has subsided. So don't be in a hurry to remove the pan from the stove. Otherwise the pan is more likely to crack.

After the pan cools well, throw out the water with floating oil. Add a mixture of gram flour and powdered salt, rub it well to all sides of the kalchatti and dry it in the sun. Make sure that all sides of the kalchatti is dried up in the sun.

Now your kalchatti is half ready for cooking. You may wonder, What is mean by Half ready?! Yes. Kalchatti is only half ready. It needs to pass one more test to be fully prepared.

What test is it?

Prepare Vatha Kuzhambu or Mor Kuzhambu or Avial or Garlic Rasam in another normal cookware. Cook it completely adding all ingredients.  When you feel that, only the boiling part of cooking is to be done, take the dish as it is and transfer it to a clean seasoned Kalchatti and place it on the stove in a very low flame i.e. SIM.
Allow it to boil.



Since the Kuzhambu is already a hot, it will start boiling soon.
It boils well even on low flame.

After 10 minutes of boiling, turn off the stove. But don't take the kalchatti off the stove immediately. Attempting to take it immediately will leave cracks in the pan. Because even after switching off the stove, the boiling point of the gravy in the kalchatti, does not decrease even for five minutes.



Even after turning off the stove the heat in the kalchatti does not decrease for a long time. So after ten or fifteen minutes gently take the kalchatti with the help of a thick cloth. Place it on a tray. And take it to the dining table. Otherwise there is a risk of burns in your hands. 

In this way, for a few weeks, kalchatti must be used only for heating purpose. 

Please ensure that kalchatti has attained the capacity to restrain enough heat. 

After that you can cook directly in the kalchatti. Even then, you should keep the kalchatti on low flame only. If you keep it on high flame, it will crack and break.

Important Rules to Remember:


* Do not cook directly on Kalchatti immediately after purchase without seasoning it.
* Kalchatti should not be cleaned with soap for any reason.
* Scrubber used to clean other
 vessels should not be used to clean Kalchatti. Use a separate scrubber for Kalchatti.
* The seasoned kalchatti should be placed on the stove in low flame i.e. SIM only.
* Seasoned Kalchatti should be used for cooking directly only after using it for heating purposes.
* Do not remove the hot kalchatti from the stove immediately after switching off the stove.
* Scrubber used to clean other vessels should not be used to clean Kalchatti. Use a separate one for Kalchatti.
* You must start cooking in Kalchatti only after using the kalchatti for heating puposes atleast 10 times prior to it. 


Will meet you with a healthy recipe shortly. Till then, Take Care. Bye! Bye!


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


கல்சட்டி / கச்சட்டி பழக்குவது எப்படி




வணக்கம் நண்பர்களே! இன்று நான் வேறு ஒரு தலைப்புடன் வந்துள்ளேன். இது சமையல் செய்முறைக் குறிப்பு அல்ல! இது நம் பாரம்பரிய சமையல் பாத்திரத்தைப் பற்றியது.


ஆம்!

கல்சட்டி அல்லது கச்சட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மாக்கல் சட்டி என்றும் அழைப்பார்கள்!


இயற்கையாகக் கிடைக்கும் சவர்க்காரக் கல் அல்லது பட்டுக் கல் என்று அழைக்கப்படும் ஒரு வகைக் கல்லால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய சமையல் பாத்திரம்தான் இந்த கல்சட்டி அல்லது கச்சட்டி.  

குழம்பு, மோர் குழம்பு, அவியல், பூண்டு ரசம் போன்றவற்றை இந்தப் பாத்திரத்தில் செய்தால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த உணவுகள், நன்கு பழக்கப்படுத்தப்பட்ட கல்சட்டியில் சமைத்தால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். 

வத்தக் குழம்பு போன்ற நீண்ட நேரம் மெதுவாக சமைக்க வேண்டிய எந்த உணவும், கல்சட்டியின் நிலையான வெப்பநிலையில் சமைத்தால், அதன் மணமும் சுவையும் சிறப்பாக இருக்கும்.

இந்த பதிவில் கல்சட்டியை எப்படி சீசன் செய்வது என்று பார்க்கலாம்.

இந்த நவீன காலத்தில் நான் ஏன் கல்சட்டியைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்! இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. நான் வத்தக்குழம்பு சமைக்கும் போதெல்லாம், மற்ற உணவு வகைகளைப் போல இது சுவையாக இல்லை என்று எனக்குத் தோன்றும். இதைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, ​​கல்சட்டியில் சமைத்தால் வத்தக்குழம்பு மிகவும் ருசியாக இருக்கும் என்று கூறிவிட்டு, ஒரு கல்சட்டி வாங்கிக் கொள் என்றார். அப்படி வாங்கும் போது தனக்கும் ஒன்று வாங்கித் தரச் சொன்னார் .

நானும் சென்னையில் இருக்கும் பெரிய பெரிய பாத்திரக் கடைகளில் எல்லாம் தேடினேன்.  ஆனால், அதற்கென்று இருக்கும் சில கடைகளில்தான் கிடைக்கும் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட கடை எங்குள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், கடைகளில் போலிகளின் அபாயமும் இருந்ததால், ஏமாந்து விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அப்போது என் தோழி எனக்கு உதவிக்கரம் நீட்டினாள். அவள் தன் அம்மாவைப் பார்க்க தன் சொந்த ஊரான கும்பகோணம் சென்றாள்.

அவளுடைய அம்மாவுக்கு நன்றி! அவர் கும்பகோணத்தில் இது போன்ற பாரம்பரியமான பாத்திர வகைகள் விற்கும் நல்ல கடை ஒன்று உள்ளது என்று கூறி என் தோழியை அங்கு அழைத்துச் சென்றார். 

என் தோழியும், எனக்கு ஒன்று, என் அம்மாவுக்கு ஒன்று என இரண்டு கல்சட்டிகளை ஆர்டர் செய்தாள். கூடவே என் வீட்டு நவராத்திரி கொலுவுக்காக மாக்கல்லினால் செய்யப்பட்டு சொப்பு பாத்திரங்களும் ஆர்டர் செய்தாள்.

  

  

 

  


 

கடைக்காரர்கள், அவள் எனக்காக ஆடர் செய்த கச்சட்டிகளையும் மாக்கல் சொப்புகளையும்  அழகாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் பேக் செய்து சென்னைக்கு கூரியர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களில் கிடைத்துவிட்டது. விலையும் குறைவுதான்.

கடை முகவரியை இங்கே தருகிறேன். கல்சட்டி அல்லது வேறு ஏதேனும் பாரம்பரிய சமையல் பாத்திரங்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள், அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் நேரடியாக ஃபோன் மூலம் உங்கள் ஆர்டரை கொடுத்தால், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கான கட்டணத்தை அவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை இந்தியாவில் எந்த இடத்திற்கும் பாதுகாப்பாக அனுப்புவார்கள்.

ஸ்ரீ துர்கா ஸ்டோர் ஹோம்நீட்ஸ்,
எண் 47, கும்பேஸ்வரர் சன்னதி, கும்பகோணம்.
அலைபேசி எண் : 9597162483.


அப்படித்தான் எனக்கு கல்சட்டி கிடைத்தது. 

சரி அடுத்து என்ன?  கல்சட்டி வாங்கியவுடன் அதை உடனடியாக அடுப்பில் வைத்து சமைக்கலாமா என்றால் அதுதான் கூடாது. 

மற்ற நவீன சமையல் பாத்திரங்கள் போல் கல்சட்டி இல்லை! நாம் அதை சீசன் செய்ய வேண்டும்.. அதாவது, கல்சட்டியை மெது மெதுவாகவே சூட்டுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். 

கல்சட்டியை பழக்குவது என்பது ஒரு நீண்ட செயல்முறையாகும். பொறுமையும் கவனமும் மிக மிக அவசியமாகும். அதை நான் இங்கே விரிவாகக் கொடுத்துள்ளேன்.

கல்சட்டியை சீசன் செய்வது எப்படி?


Top

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் / விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.

புதிய கல்சட்டியை  சுத்தமான பருத்தித் துணியால் தூசி போக நன்றாகத் துடைக்கவும்.

எண்ணை மஞ்சள் கலவையை கல்சட்டியின் எல்லா பக்கங்களிலும் (உள்ளேயும் வெளியேயும் சட்டியின் அடியிலும்) இடைவெளி விடாமல் சீராகத் தடவி அதை வெயிலில் காய வைக்கவும்.

 

 

 

 

 

 

 

 


இதே போல ஒரு வாரத்துக்கு தினமும் சட்டியில் மஞ்சள் பொடி கலந்த எண்ணை தடவி  வெயிலில் காய வைக்கவும். 

அதன் பின்னர் கடலை மாவு / அரிசி மாவு / கோதுமை மாவு - எதாவது ஒன்றை கொஞ்சம் பொடி உப்பு கலந்து சட்டியில் தடவி எண்ணைப் பிசுக்கை நீக்கி விட்டு சாதம் வடித்த கஞ்சி அல்லது அரிசி களைந்த நீரை சட்டியில் வழிய வழிய  ஊற்றி ஊற விடவும். 

எந்தக் காரணம் கொண்டும் சோப்பு பயன்படுத்தவே கூடாது. 

மண் சட்டியில் உள்ளது போலவே கல்சட்டியிலியும் ஏராளமான சிறு சிறு துளைகள் இருக்கும். அந்தத் துளைகளில் சோப்பு சென்று தங்கி விட வாய்ப்புள்ளதால் நாம் மறந்தும் கூட இந்தப் பாத்திரங்களில் சோப்பு பயன்படுத்தக் கூடாது.

அதே போல மற்ற பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தும் நாரை இதற்கு பயன்படுத்தக் கூடாது. இதற்கென தனியாக நார் வைத்துக் கொள்ளவும். இந்த நாரை மற்ற பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தக் கூடாது. 

தேங்காய் நார் / நவீன பச்சை நிற ஸ்காச் ப்ரைட் நார் - உங்கள் வசதிக்கேற்ப எது வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். ஆனால் இதை வேறு பாத்திரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. 

இதே போல ஒரு வாரத்துக்கு தினம் தினம் புதிதாக அன்றன்று அரிசி களைந்த நீரை விட்டு ஊற விட வேண்டும்.

இதே போல மஞ்சள் தூள் - எண்ணைக் கலவை மற்றும் அரிசி களைந்த நீர் என மாற்றி மாற்றி இரண்டு மூன்று முறை செய்யவும். 

அதன் பின்னர் வேறு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அந்த வெந்நீரை கல்சட்டியில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். அடுப்பை குறைந்த தீயில் அதாவது சிம்மில் வைக்கவும். சில நிமிடங்களில் நீர் கொதிக்கத் தொடங்கும். 

 

 



சட்டியில் இருக்கும் துளைகளில் தங்கியிருந்த எண்ணை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் நீரில் மிதக்கத் தொடங்கும். 

வெந்நீரில் எண்ணெய் துளிகள் மிதப்பதைக் காணலாம்.

அப்போது அடுப்பை அணைத்து விடவும். 

அடுப்பை அணைத்து ஐந்து நிமிடங்கள் வரை சட்டியில் இருக்கும் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். எனவே உடனே சட்டியை அடுப்பிலிருந்து இறக்க முயற்சிக்காதீர்கள். 

கொதிப்பு அடங்கிய பின்னரும் சட்டியில் சூடு குறைய குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எனவே அடுப்பிலிருந்து சட்டியை இறக்க அவசரம் காட்ட வேண்டாம். இல்லையெனில் சட்டியில் விரிசல் விழ அதிக வாய்ப்புள்ளது. 

சட்டி நன்றாக ஆறிய பின் எண்ணை மிதக்கும் நீரைக் கொட்டிவிட்டு கடலை மாவு மற்றும் பொடி உப்பு கலவை சேர்த்து நன்றாகத் தேய்த்துக் கழுவி வெயிலில் காய விடவும்.

வெயில் சட்டியின் எல்லா பக்கங்களிலும் படுமாறு மாற்றி மாற்றி வைத்து காய வைக்கவும். 

இப்போது உங்கள் கல்சட்டி சமையல் செய்வதற்கு பாதி தயார். அதென்ன பாதி தயார்? ஆமாம். கல்சட்டி இப்போது பாதிதான் தயாராகி உள்ளது. முழுதாகத் தயாராக இன்னும் ஒரு தேர்வில் அது தேர்ச்சி பெற வேண்டும். 

அது என்ன தேர்வு? 

சமைக்கவிருக்கும் வத்தக்குழம்பை அல்லது மோர் குழம்பை அல்லது பூண்டு ரசத்தை, எதுவாகிலும் அதனை, கடாயிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ முழுவதுமாகச் சமைத்து விட்டு, இன்னும் பத்து நிமிடங்களாவது கொதிக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில், அந்த உணவை அப்படியே எடுத்து சுத்தமான கல்சட்டிக்கு மாற்றி அதை அடுப்பில் மிகவும் குறைந்த தீயில் அதாவது சிம்மில் வைக்கவும். 

ஏற்கனவே சூடான பண்டம்தான் என்பதால் விரைவிலேயே அது கொதிக்கத் தொடங்கும். 



குறைந்த தீயில் இருந்தாலும் அது நன்றாகவே கொதிக்கும். 

வேண்டிய அளவு கொதித்தபின் அடுப்பை அணைத்து விடவும். ஆனால் கல்சட்டியை அடுப்பிலிருந்து உடனடியாக இறக்கி வைக்க வேண்டாம். உடனடியாக இறக்கி வைக்க முயற்சி செய்தால் சட்டியில் விரிசல் விட்டுவிடும். ஏனெனில் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் கல்சட்டியில் உள்ள குழம்பின் கொதிநிலை சற்றும் குறையாது. 



அடுப்பை அணைத்து குழம்பின் கொதிப்பு அடங்கிய பின்னரும் சட்டியில் சூடு நெடு நேரத்துக்கு குறையாது. அதனால் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து கனமான துணியின் உதவியுடன் கல்சட்டியை மெதுவாகக் கீழே இறக்கி ஒரு பெரிய தட்டு அல்லது ட்ரேயில் வைக்கவும். கல்சட்டியை அந்தத் தட்டின் உதவியுடன் பத்திரமாக உங்கள் சாப்பாட்டு மேஜைக்கு எடுத்துச் செல்லுங்கள். 

இது போல சில வாரங்களுக்கு வேறு பாத்திரத்தில் சமைத்த உணவை கல்சட்டியில் சூடு செய்ய மட்டும் பயன்படுத்தி கல்சட்டியை சூட்டுக்கு பழக்கப்படுத்த வேண்டும். 

அதன் பின்னரே கல்சட்டியில் நேரடியாக சமையல் செய்யலாம். அது கூட சிறிய தீயில் மட்டும்தான் சட்டியை வைக்க வேண்டும். மறந்தும் கூட அதிகத் தீயில் அதாவது ஹை ஃபிளேமில் வைத்தால் கல்சட்டியில் விரிசல் விழுந்து உடைந்து விடும். 

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய நிபந்தனைகள்:


* கல்சட்டியை வாங்கியவுடனேயே பதப்படுத்தாமல் /  பழக்கப்படுத்தாமல் அதில் நேரடியாக சமையல் செய்யக் கூடாது. 
* கல்சட்டியை எக்காரணம் கொண்டும் சோப்பு கொண்டு விளக்கக் கூடாது. 
* மற்ற பாத்திரங்களை விளக்கப் பயன்படுத்தும் நாரை கல்சட்டி விளக்கப் பயன்படுத்தக் கூடாது. கல்சட்டிக்கென்று தனியாக நார் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பழக்கப்படுத்திய கல்சட்டியை அடுப்பில் சிறிய தீயில் அதாவது சிம்மில்தான் வைக்க வேண்டும்.
* பழக்கப்படுத்திய கல்சட்டியை முதலில் உணவு சூடு செய்து பழக்கப்படுத்திய பின்னரே நேரடியாக சமையல் செய்ய பயன்படுத்த வேண்டும். 
* சூடாக இருக்கும் கல்சட்டியை அடுப்பை அணைத்த உடனேயே அடுப்பிலிருந்து இறக்கக் கூடாது. 
* கல்சட்டியை குறைந்தது 10 முறை சூடாக்குவதற்குப் பயன்படுத்திய பின்னரே அதில் சமைக்கத் தொடங்க வேண்டும்.


விரைவில் ஆரோக்கியமான செய்முறையுடன் உங்களை சந்திக்கிறேன். அதுவரை, டாட்டா! பை! பை!


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️